CORONA MEETING

Advertisment

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.

அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலாகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், கரோனாபாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். எந்த பகுதியும்அதிகம் பாதிக்காத வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இறப்பு விகிதத்தை குறைக்க முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களை கண்டறிந்து விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.