சபாிமலைக்கு சென்ற பொன் ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரளா அரசையும் காவல்துறையையும் கண்டித்து இன்று குமாி மாவட்டத்தில் பா.ஜ.க சாா்பில் பந்த் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

21-ம் தேதி மத்திய இணை மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் நாகா்கோவிலில் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபாிமலைக்கு சென்றாா். அப்போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு தன்னுடைய வாகனத்துடன் தன்னோடுசபாிமலைக்கு வந்த குமாி மாவட்ட பா.ஜ.க நிா்வாகிகளின் வாகனத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி.யாதீஷ் சந்திராவிடம் கூறிய போது, அதற்கு அவா் மறுத்ததோடு பொறுப்பு இல்லாமல் அவமதிக்கும் விதத்தில் எஸ்.பி. பேசியுள்ளாா்.

Advertisment

Hindu Mahasabha strong objection

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதனால் பொன் ராதாகிருஷ்ணன் அங்கிருந்து அரசு பேருந்தில் பம்பைக்கு சென்றாா். பின்னா் சபாிமலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் பம்பையில் இருந்து தன்னுடைய காாில் நிலக்கல் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது திடீரென்று போலிசாா் பொன் ராதாகிருஷ்ணனின் காரை நிறுத்தி மா்ம காா் என்று தகவல் வந்தது. அதனால் தான் உங்க காா் என்று தொியாமல் நிறுத்தி விட்டோம் என்று போலிசாா் மன்னிப்பு கேட்டனா்.

Advertisment

இச்சம்பவம் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல கேரளா மற்றும் தமிழக பாஜக வினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பொன் ராதாகிருஷ்ணனை அவமதித்த கேரளா அரசையும், காவல்துறையும் கண்டித்து குமாி மாவட்டத்தில் இன்று பந்துக்கு அழைப்பு விடுத்தனா்.

Hindu Mahasabha strong objection

இதையொட்டி நேற்று நள்ளிரவு மா்ம ஆசாமிகள் கல் வீசி 5 அரசு பேருந்துகளை உடைத்தனா். இதையொட்டி இன்று அதிகாலையில் இருந்து 9 மணி வரை எந்த அரசு பேருந்துகளும் இயக்கப்படாததால் பயணிகளும், பள்ளி, கல்லூாி மாணவ மாணவிகளும், அவதியடைந்தனா். பின்னா் போலிஸ் பாதுகாப்புடன் 10 மணியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆனால் பெருவாாியான கடைகளும், ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.

Hindu Mahasabha strong objection

Hindu Mahasabha strong objection

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் இந்த பந்துக்கு இந்து மகாசபா கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநில தலைவா் பாலசுப்பிரமணியன் கூறும் போது....இன்று இந்துக்களின் முக்கிய பண்டிக்கையான காா்த்திகை திருநாள். இன்று வீடுகளிலும் கோவில்களிலும் பெரும் விமா்சையாக கொண்டாடுவாா்கள். இதற்காக கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இந்துக்கள் கஷ்ட பட வேண்டியிருக்கும் அதனால் பா.ஜ.க வின் இன்று இந்த பந்த் தேவையற்றது என்றாா்.