Advertisment

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை! – உயர் நீதிமன்றம் ஆதங்கம்! 

High court

Advertisment

காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக்கோரி, அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொளிக் காட்சி மூலம், மாணவியை ஆஜர்படுத்திய போலீஸார், மாணவி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றிய ஏற்கனவே திருமணமான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய், திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் இளம்பெண்கள் துன்புறுத்தப்படுவதைகாணமுடிகிறது. திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமற்றி திருமணம் செய்பவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

Advertisment

பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போகும் இளம்பெண்கள், திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அடுத்த வாரம் பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

highcourt marriage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe