Advertisment

குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை; தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

strict action will be taken if children are employed

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை, தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தொழிலாளர் சட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

ஈரோடு மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 35 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 90 பட்டாசு கடைகள் உள்பட அனைத்து கடைகள் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 5 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

Advertisment

அதேபோல் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் 49 இடங்களில் குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குழந்தை, வளர் இளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது என்பது குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் சினிமா தொழில் குறித்து 16 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறை வெப்சைட்டில் பதிவு செய்ய நிறுவன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆய்வு குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: எடையளவுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகள் முத்திரை இன்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்ட விதிகளின்படி தண்டனைக்குரியது.

ஆய்வின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காதது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணிக்கு அமர்த்தினால் ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாத முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க நேரிடும். மேலும் குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe