
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, எம்.வி.எம். மகளிர் கல்லூரி,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளான ராஜராஜேஸ்வரி மருத்துவமனை,காட்மருத்துவமனைஉள்பட சில மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியும்அந்தந்த மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்துத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையிலதிண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளராக இருந்து வரும் டாக்டர் சுரேஷ் பாபு அரசு மருந்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்ததன் மூலம் பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதாபிமான அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில்தான் திடீரென டாக்டர் சுரேஷ் பாபுவுக்கும் கரோனா பரவியது. இதனால்உடனே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற்று வருபவர்,விரைவில் பூரண நலம்பெறும் நிலையில் இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது சில விஷமிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாக்டர் சுரேஷ்பாபு உடல்நிலை குறித்துத் தவறான செய்திகளைச் சமூக வலைத்தளங்களில்பரப்பி வந்தனர். அதைக் கண்டு டாக்டர் சுரேஷ்பாபு மனம் நொந்து போய்விட்டார்.உடனே இந்த விஷயத்தைகலெக்டர் விஜயலட்சுமியின் காதுக்கு கொண்டு சென்றார்ஜே.டி. சிவகுமார்.அதைக் கேட்டு மனம் நொந்து போனகலெக்டர், உடனே பி.ஆர்.ஓவை தொடர்பு கொண்டு டாக்டர் சுரேஷ் பாபு நல்ல முறையில் இருந்து வருகிறார்,அப்படி இருக்கும்போது அவர்மீதுஅவதூறு பரப்பும் விஷமிகள்மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி,பி.ஆர்.ஓவும் பத்திரிகைகளுக்கு கலெக்டரின் எச்சரிக்கையைச் செய்தியாக கொடுத்து உள்ளார்.
டாக்டர் சுரேஷ்பாபு எப்பொழுதுமே அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அன்பாகப் பேசி மருத்துவம் பார்க்கக் கூடியவர்.பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களிடமும் டாக்டர் சுரேஷ்பாபு நல்ல பெயர் எடுத்து வருகிறார். அப்படிப்பட்டவர் கரோனாவில் இருந்துமீண்டு வரப்போகும்நாளுக்காகஅனைத்துத்தரப்பு மக்களும் காத்திருக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)