'The street lights were switched off when I arrived' - JP Nadda

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. இனி அதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டாம் என இன்று நிகழ்ச்சி ஒன்றில்எடப்பாடி பழனிசாமி என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் சென்னை வள்ளலார் நகரில் நடைபெற இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தடைந்தார்.நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, ''பொருளாதாரத்தில் நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். ஒரு சில நாட்களில் 234 தொகுதிகளிலும் பாஜக பாதயாத்திரையை நிறைவு செய்யும். திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி இல்லை. நான் வரும்போது தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. நான் வரும்போது கடைகள் மூடப்பட்டிருந்தன. இவை எமர்ஜென்சி போல் உள்ளது. ஊழலற்ற அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். ஊழல் அரசை அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். பாஜக தலைவர்களின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது'' என்றார்.

Advertisment