Stray dogs chased child boy

சாலையில் சென்றுகொண்டிருந்த அப்பாவி சிறுவனைரவுண்டி கட்டி துரத்தும் தெருநாய்களின் வீடியோ,இணையவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டிக்கு அருகே உள்ளதுலிங்கம நாயக்கன்பட்டி கிராமம். இந்தப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாகத்துரத்துகின்றன. மேலும், வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்திச் செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிவாகனங்களில் இருந்து கீழே விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. நாய்கள் தொல்லையால் பல தரப்பினரும் அச்சத்துடனேயே சாலைகளில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், எட்டு தெரு நாய்கள் ஒன்றாக சேர்ந்துஒரு சிறுவனை அந்தத்தெரு முழுவதும் துரத்தி வந்துள்ளது.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தெரு நாய்களிடமிருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு, சிறு காயங்களுடன் அந்தச் சிறுவன் உயிர் தப்பியுள்ளார்.இதனையடுத்து, தெரு நாய்களிடம் சிக்கிய சிறுவன்கதறி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.