/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a373.jpg)
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 12, 17 வது வார்டு பகுதிகளான திருவிக நகர், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலைகளில் செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து சுமார் 10 க்கும் மேற்பட்டவர்களை தெருக்களில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் கை, கால்கள் போன்ற இடங்களில் கடித்துக்குதறி உள்ளது.
இதில் படுகாயமடைந்த திரு.வி.க நகரைச் சேர்ந்த அனீஸ் (5), சாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் (47), பூந்தோட்ட வீதியைச் சேர்ந்த சாந்தா (60) ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த கோகிலா மற்றும் அவரது மகன் தருண் மலங்கு தெருவை சேர்ந்த சுஹேல் (43), பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் (9) ஆகியோர்களை தெரு நாய்கள் அடுத்தடுத்து கடித்துள்ளது.
மேலும் படுகாயமடைந்த அனைவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அடுத்தடுத்து நாய்கள் கடித்து மருத்துவமனைக்கு சென்றதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வரும் நபர்களை பேரணாம்பட்டு ஆர்.ஐ. சரவணன், விஏஓ துரைமுருகன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெரு நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)