
திருச்சி ஓயாமரி சுடுகாடு எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் நேற்று (10.09.2021) இரவு சுமார் 7 மணியளவில் உடலில் ரத்தக் காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து கோட்டை காவல் நிலைய காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அந்த வாலிபர் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow Us