Advertisment

பேருந்து கண்ணாடியை உடைத்த மர்ம ஆசாமிகள்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!!

stranger who broke the glass of the bus

சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியகுமட்டி பேருந்து நிறுத்தம் அருகே நாகப்பட்டினத்திலிருந்து திருப்பதி செல்லும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை மர்ம ஆசாமிகள் செவ்வாய்க்கிழமை (02.11.2021) இரவு கல்லை வீசி சேதப்படுத்தி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

மாவட்டத்தின் சில இடங்களில் வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், தீபாவளியையொட்டி பேருந்துகள் இயக்கத்தைப் போக்குவரத்து கழகங்கள் குறைத்துள்ளன. இதனால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான பேருந்து இயக்கம் இல்லாததால் பொதுமக்கள் தீபாவளி நேரத்தில் வெளியூருக்கு செல்வதில் சிரமம் அடைந்துவருகின்றனர்.

Advertisment

police bus Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe