Advertisment

கடலில் கண்டெடுக்கப்பட்ட விநோத கல்; சிதம்பரத்தில் அதிசயம்   

strange stone found sea

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த குமார் என்பவர்கடந்த 6 மாதங்களுக்கு முன்புகொடியம்பாளையம் கடற்கரைப் பகுதிக்கு அவருடைய நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போதுகடலில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோதுதிடீரென பாறை போன்ற ஒரு பொருள்குமாருக்குத்தென்பட்டுள்ளது. அதை எடுத்துப் பார்க்கும்போதுவித்தியாசமாகத்தெரிந்ததால்அதைத்தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisment

சிறிது நாட்கள் கழித்து வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த குமார், அந்தப் பொருளைத்தூக்கி வெளியே போட்டுள்ளார். அப்போது, தண்ணீரில் விழுந்த அந்தகல் போன்ற பொருள்மிதந்து மேலே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், அதைத்தூக்கி வந்து எடை போட்டு பார்த்ததில் 1 கிலோ 200 கிராம் இருந்துள்ளது.

Advertisment

இதனையடுத்துஅதே பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி முத்துக்குமார் என்பவரிடம்அந்த மிதக்கும் கல்லைக் கொடுத்துள்ளார். மிதக்கும் கல்லைப் பார்த்த முத்துக்குமார்மீடியாவில் செய்தி வெளியிட்டார். இந்நிலையில், புராணக் கதைகளில் பேசப்பட்டு வந்த மிதக்கும் கல் குறித்த செய்திசோசியல் மீடியா முழுவதும் வேகமாகப் பரவியது.

இது குறித்துத்தகவலறிந்த வனத்துறையினர்இன்று காலை முத்துக்குமாரின் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் பேசும்போது “இந்த மிதக்கும் கல் குமிழி என்ற கல் வகையைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம். அப்படி இல்லையென்றால்திமிங்கலத்தின் எச்சிலாகக் கூட இருக்கலாம்என்று தகவல் பரவியது. ஆனால், இந்த நவீன யுகத்தில் வீடு கட்டுவதற்குக் கூடஇந்த மிதக்கும் கல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்எதுவாக இருந்தாலும் இந்த மிதக்கும் கல்லை ஆய்வு செய்த பிறகுதான் முழுமையான தகவல் வெளியிட முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

police people sea Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe