
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தரப்பில் ஏதேனும் தவறு செய்தால் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையாக நிர்வாகத்தால் மெமோ வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாகர்கோவிலில் பஸ் டிரைவர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மெமோ வினோதமாக இருந்தாலும் சற்று நகைப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பது போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள செட்டிகுளம் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பணிமனையில் பேருந்து ஓட்டுநராக இருப்பவர் ஜெயக்குமார். இவருக்கு அதிகாரிகள் மெமோ ஒன்றை வழங்கி உள்ளனர். அதில் ஓட்டுநர் இருக்கைக்கு பின்பகுதியில் அவரது முகம் துடைப்பதற்காக வைத்திருந்த துண்டை விரித்து போட்டதற்காக அந்த மெமோ வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த மெமோ குறித்த புகைப்படங்கள் 'இதற்கெல்லாம் மெமோவா' என ட்ரோல் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)