/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/simbu43434.jpg)
சென்னையில் உள்ள பிரபல மால்களில் ஒன்று சென்னை விஆர் மால். இந்த மாலில் அமைந்துள்ளது பிவிஆர். திரையரங்குகள். புதிதாக வெளியாகும் அனைத்து படங்களும் இந்த திரையரங்குகளில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர்- 2 படம், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பியது பிவிஆர் திரையரங்குகளின் நிர்வாகம்.
அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி, நடிகர் சிம்பு நடிப்பில், கடந்த 2010- ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தனது திரையரங்குகளில் உள்ள ஒரு திரையில் ஒளிபரப்ப தொடங்கியதுபிவிஆர் நிர்வாகம். இப்படத்தை காண நாள்தோறும் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படத்திற்கான டிக்கெட் பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தை பிவிஆர் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், பீஸ்ட், கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு மத்தியிலும்'விண்ணை தாண்டி வருவாயா' படம் இரண்டு மாதங்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)