Skip to main content

'90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று' - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

'Storm winds up to 90 kmph' - Met office warns fishermen

 

தமிழகத்தில் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், 'இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்' தெற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 லிருந்து 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

 

நாளை தெற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதி, தென்கிழக்கு வங்கக்கடலில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், நவம்பர் 29 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45லிருந்து 65 கிலோ மீட்டர் வேகம் சூறைக் காற்று வீசும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, மதுரை, சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Tamilnadu fisherman incident at sea involved srilanka

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தற்போது மீன் பிடித் தடைக்காலம் என்பதால் நாகை மாவட்டம் செரூகூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (28.04.2024) விசைப்படகில் மீன் பிடிக்க செல்லாமல் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களின் முருகன் என்பவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று (29.04.2024) இரவு மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், மீன்பீடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

அச்சமயத்தில் படகின் உரிமையாளரான முருகன் கடற்கொள்ளையர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் முருகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்த முருகனை சக மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்கொள்ளையர்கள் நடத்திய இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.