Skip to main content

புயலுக்கு தெரியுமா சாதீ…?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

டெல்டா மாவட்டங்களையும், அதன் அருகே இருக்கும் சில மாவட்டங்களிலும் கோர தாண்டவம் ஆடிச் சென்றிருக்கிறது கஜா புயல். உயிர்சேதம், பொருட்சேதம் என பல துயரங்களை சந்தித்துள்ள அந்த மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.

 

kaja

    
சோறு போட்ட விவசாயி இன்று பட்டினியாய் கிடப்பதை பார்க்க சகிக்காத பலர், பிஸ்கட், ரொட்டி, துணிமணி, நாப்கின் என தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து நிவாரண பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை, கிராமத்தினர் சில இடங்களில் மறித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். சில இடங்களில் தங்களுக்கு தேவை போக, மற்ற ஊர்களுக்கு திருப்பிவிடுகின்றனர்., அந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என வழியும் சொல்லிவிடுகின்றனர்.

  

kaja

 

ஆனால், ஒரு சில இடங்களில் நிவாரண பொருட்களை பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் வசிக்கும் தெருக்கள் முதலிலும், காலனி தெரு (தலித் மக்கள் வசிப்பிடம்) அதை தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது பெரும்பான்மை மக்களின் வீடுகள் முதலில் இருப்பதால், அவர்கள் அதை முதலில் பெற்றுக் கொள்கிறார்கள். காலனி மற்றும் சேரிப்பகுதிக்கு இந்த பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சேரி மக்கள் வசிக்கும் பகுதி, விளம்பர தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களிலும், சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 

    
இருந்ததை எல்லாம் இழந்துவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது கஜா புயல். அந்த புயலுக்கு தெரியுமா? இவர்கள் இன்ன சாதி என்று. புயலை பொறுத்தவரை எல்லோரும் ஒன்று தான். அதுபோல் எல்லோரும் ஓரினம் என்ற எண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவது எப்போது.?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாதி ஒழிப்பு அமைப்பினர் சார்பில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

 

இன்று (23-12-2021) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சாதி ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இளந்தமிழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்ற பலரும் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்தில் அதிகரிக்கும் சாதி ஆணவக் கொலைகள் மற்றும் சாதி வெறுப்பு குற்றங்களை தடுக்க உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டி கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


 

Next Story

வீட்டின் ஓடுகளை இறக்கிய விவசாயி...! கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

'நிவர்' புயல் தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தென்னை மரங்களில் மட்டைகள், தேங்காய்களை இறக்கி வருவதுடன் மா, பலா, தேக்கு போன்ற மரங்களில் கிளைகளையும் அகற்றி உள்ளனர். அதேபோல, கடைகள் ஓரங்களில் நின்ற மரங்களில் கிளைகளை அகற்றியுள்ளனர். 

கடை, வீடுகளின் கூரைகளைத் தார்ப்பாய்கள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய கஜா புயலில், லட்சக் கணக்கான வீடுகள், கோடிக் கணக்கான மரங்கள் சேதமடைந்தது. பல வீடுகளில் ஓடுகள் காணவில்லை. இந்த நிலையில்தான், கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில், குமார் என்ற விவசாயி, தனது வீட்டின் மேல் போடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஓடுகளையும் கீழே இறக்கி வைத்துவிட்டார். 

இது குறித்து விவசாயி குமார் கூறும் போது, “கஜா புயலில் எங்கள் வீட்டின் ஓடுகள் முழுமையாகக் காற்றில் பறந்து உடைந்துவிட்டது. அதன் பிறகு, கடன் வாங்கி மீண்டும் ஓடுகளைப் போட்டோம். வீட்டை இழந்த எனக்கு அரசு வீடு கேட்டு, மனு கொடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் இருக்க பயமாக உள்ளது. அதனால்தான் முன் எச்சரிக்கையாக, நண்பர்கள் துணையோடு ஓடுகளை இறக்கி வைத்துவிட்டேன். இனிமேலாவது எனக்கு அரசு வீடு கொடுத்தால் எதிர்வரும் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியுடன் நிம்மதியாக இருப்பேன்” என்றார்.