கடந்த வாரம் நிவர் புயல் உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சேதத்தை விளைவித்த நிலையில், தற்போது புதிய புயல் ஒன்று நாளை காலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், நாளை காலை இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புயல் உருவான பிறகே அதற்கு பெயர் சூட்டப்படும் என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.