storm is forming in the Bay of Bengal today

Advertisment

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்ததாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் எனவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு 10 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின்10 குழுக்கள் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.