Advertisment

இன்னும் புயல் வரட்டும்... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

Minister Dindigul Srinivasan

திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வினியோகம் தடைப்பட்ட பகுதிகளில் படிப்படியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்ட புயல் மழையால் பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகையால் இன்னும் புயல் வரட்டும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிட்டால் போதும் என்றார்.

Dindigul Srinivasan minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe