
தமிழகத்தில் வரும் மே 9 ஆம் தேதியன்று 16 மாவட்டங்களில் கனமழைக்குவாய்ப்பிருப்பதாகசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளநிலைத்தில்பல்வேறு கடலோர மாவட்டங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வரும் ஞாயிற்றுக்கிழமை புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் மே 8 ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பொழியும். வரும் 9 ஆம் தேதி புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மே 8 ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில் இயல்பைவிட அதிகபட்சமாக வெப்பநிலை 3டிகிரிசெல்சியஸைதாண்டலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரிநகரம் மற்றும்அதனைசுற்றியுள்ளபகுதிகளில் மிதமான மழை பொழிந்துவரும் நிலையில்,இண்டூர்பகுதியில் ஆலங்கட்டி மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கடலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கைபுயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)