ADVERTISEMENT

கழிவு நீரை நிறுத்து... வெடிக்கும் மக்கள் போராட்டம்!

12:50 PM Dec 20, 2018 | paramasivam

நெல்லை மாநகராட்சியின் நிர்வாகக் கோளாறு காரணமாக பாதாள சாக்கடை கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்படாமல் மண்டலப் பகுதியின் குளத்தில் கலப்பதைக் கண்டித்து மாநகராட்சிக்குட்பட்ட ராமையன்பட்டி பகுதியில் நடந்த கடையடைப்பு போராட்டம் பற்றி நக்கீரன் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

தற்போது அந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாகத் தொடர் போராட்டமாக வெடித்து விட்டது.

ADVERTISEMENT

பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் அடிப்படையில், நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பாளை, தச்சை, டவுண், மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களிலிருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரை சுற்றுச் சூழல் விதிப்படி மறு சுழற்சி செய்து வெளியேற்றப்பட வேண்டும் இவ்வாறு சேகரிக்கப்படும் பாதாளச் சாக்கடையின் திடக்கழிவு நீர் ராமையன்பட்டிக் குப்பைக் கிடங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து கழிவு நீர் அவ்வப்போது அருகில் உள்ள கோடகன் கால்வாயில் திறந்து விடப்படுகிறதாம்.

p class="text-align-justify">இதன் காரணமாக அங்கிருந்து செல்கிற தண்ணீர் சத்திரம் புதுக்குளம், இலந்தைக்குளம், சீனியப்பன் திருத்து, பகுதிகளில் பாய்ந்து அங்குள்ள குளங்களின் தண்ணீரை மாசு படுத்துகின்றன தண்ணீர் பச்சை நீராக மாறியது மில்லாமல் ராமையன்பட்டி சுற்றுப் பகுதியின் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரக் கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கழிவு தண்ணீர் குளங்களில் மாசு ஏற்படுத்துவதைக் கண்டித்து ஆரம்பத்தில் ராமையன்பட்டி பகுதியின் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுன கண்டனத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இரண்டாம். நாள் போராட்டம் என மக்கள் போராட்டமாக வெடித்து விட்டது.

பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திரண்ட மக்கள் அங்கே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியவாறு, தங்களுக்கான உணவை அங்கேயே தயாரித்து சாப்பிடத் தொடங்கினர்.

அங்கு வந்த வருவாய் ஆய்வாளர், சப்கலெக்டர் தலைமையில் பேச்சு நடத்தலாம். என அழைப்பு விடுத்த போது, கடந்த 2008 போராட்டத்தின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தை ஒப்பந்தப்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படாதததைச் சுட்டிக்காட்டிய மக்கள், பேச்சுவார்த்தைக்கு மறுத்து விட்டார்கள்.

தொடர்ந்து தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான லட்சுமணன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தச் சென்றனர் குளங்களில் கழிவு நீர் கலக்க விடுவது உடனே நிறுத்தப்படும், மூன்று மாதங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பிரச்சினைக்குத தீர்வு காணப்படும் என அவர்கள், கூறியதை ஏற்க மறுத்த மக்கள், போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

போராட்டம் எதிரொலியாக ராமையன்பட்டிப் பகுதியை போலீசார் மானிட்டர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT