
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 நாட்களில் 3 பெரிய கொள்ளைச் சம்பவங்கள் நடந்து தொகுதி மக்களையே அச்சத்தில் வைத்திருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், பேராவூரணித் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான எஸ்.வீ.திருஞானசம்மந்தம், எனது தொகுதியில் நடக்கும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து கொள்ளையர்களை பிடித்து நடவடிக்கை எடுங்கள் என்றுகாவல்துறை தலைவருக்கு ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது,
சம்பவம் : 1.
6.4.2021 அன்று இரவு திருச்சிற்றம்பலம் காவல் சரகம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் சுவாமிநாதன் என்பவர் வீட்டில் ரூ.2.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் : 2.
8.4.2021 இரவு சேதுபாவாசத்திரம் காவல் சரகம் நாடியம் ஊராட்சி நவக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் மருமகளை தாக்கி தங்கி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் : 3.
9.4.2021 இரவு சேதுபாவாசத்திரம் காவல் சரகம் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் (த.மா.கா) கூத்தலிங்கம் மனைவி மீனா வை தாக்கி 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இப்படி பேரவூரணி தொகுதியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவர்துறை தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அ.தி.மு.க வேட்பாளரே மனு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)