கூரை மீது வந்து விழும் கற்கள்; தூக்கமின்றி தவிக்கும் கிராமம்

 Stones falling on the roof; Villagers suffering from sleeplessness

திருப்பூரில் ஒரு கிராமத்தில் வீட்டு கூரையின் மீது திடீரென கற்கள் விழுந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் கோவிலில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே இரவு நேரங்களில் வீட்டுக் கூரையின் மீது கற்கள் விழுந்து வருகிறது. இதனால் அச்சத்தில் உள்ள ஓட்டப்பாளையம் கிராம மக்கள் அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து இந்தப் புகாரை தெரிவித்து வந்த நிலையில் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ட்ரோன் கேமரா மூலமாகவும், கிரேன் உதவியுடனும் கண்காணிப்புகள் நடைபெற்று வருகிறது. திடீர் திடீரென வீட்டின்கூரைகளில் கற்கள் விழுவதால் உறக்கம் இல்லாமல் தவித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

police thirupur
இதையும் படியுங்கள்
Subscribe