Advertisment

களவாடப்பட்ட விருத்தகிரீஸ்வரர் கோயில் கலசங்கள் மீட்கப்பட்டதையடுத்து மறு குடமுழுக்கு!

Stolen Viruthakriswarar temple urns recovered and re-pitched!

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி விருத்தாம்பிகை சன்னதியின் மூலவர் கோபுரம் விமானத்தில் இருந்த மூன்று தங்க கலசங்களை மர்ம நபர் ஒருவர் திருடியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் 3 நாட்களுக்குள் தங்கக் கலசங்களை திருடிய சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மூன்று தங்க கலசங்களை பறிமுதல் செய்னர். மேலும், திருடியவரை சிறையில் அடைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று தங்க கலசங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, விருத்தகிரீஸ்வரர் கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

Stolen Viruthakriswarar temple urns recovered and re-pitched!

Advertisment

மண்டல பூஜை முடிவதற்குள் கலசங்கள் திருடப்பட்டதால் மீண்டும் கலசங்கள் பொறுத்தி குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதால் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி, சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து கலசங்களுக்கு பிரதிஷ்டை செய்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்க கலசங்களுக்கு நேற்று முதலாம் யாக பூஜை, இரண்டாம் கால பூஜை நடைபெற்று இன்று பக்தர்களின் கரகோஷத்துடன் மூன்று தங்க கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி, குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இக் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

temple Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe