Advertisment

கடைக்குள் புகுந்து தக்காளி திருட்டு! கடலூரில் பரபரப்பு

Stolen tomatoes in the store

கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்குள்ள மார்க்கெட் பகுதியில் பார்வதி என்பவரது கடையில் இருந்து கடந்த 26 ஆம் தேதி இரவு 7000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பெட்டி தக்காளிகள் கொள்ளை போனது. அடுத்த நாள் 27 ஆம் தேதி ராமன் என்பவர் கடையிலிருந்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தக்காளிப் பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

Advertisment

தக்காளி விலை ரூ. 100ஐக்கடந்து விற்பனையாகி வரும் நிலையில், தக்காளி திருட்டு குறித்து வணிகர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திட்டக்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ், தக்காளிதிருடர்களைக் கண்காணித்து விரைவில் பிடிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Advertisment

Cuddalore tomato
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe