Advertisment

திருடுபோன செல்போன்கள் மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பு! 

Stolen cell phones handed back to the public!

Advertisment

திருச்சி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளில்செல்போன்கள் காணாமால் போன புகார்கள் அதிகளவில் பதிவாகின. அதனைத் தொடர்ந்து இத்தகைய காணாமல் போனா செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 100 ஆன்ட்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு வாரத்தில் மீட்டனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை இன்று (13.04.2022) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

cellphone trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe