மானம் போன அரசு எங்கள் மீது போட்டிருக்கும் மானநஷ்ட வழக்கை சந்திக்க தயார்!! -ஸ்டாலின்

2012-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெ.வை விமர்சித்து பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு போடப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

dmk

இந்நிலையில் அவதூறு வழக்கில் அவர்நேரில் ஆஜராவதிலிருந்துவிலக்கு அளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

கடந்த 2012-ஆம் ஆண்டு என் மீது மானநஷ்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் தவறான அடிப்படையில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுமானநஷ்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க நான் மட்டுமல்ல திமுகவின் முன்னாள் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை யாராக இருந்தாலும் சந்திக்க தயார்.

எங்கள் மீது மானநஷ்ட வழக்குபோட்டிருக்கும் இந்த அரசு மானம் போன அரசு. காரணம் எடப்பாடி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் போல் குட்கா தொடர்பாக விஜயபாஸ்கரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. இப்படி அவர்கள் மானம் ஒருபக்கம் போய் கொண்டிருக்கிறது. எங்கள் மீது போடப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கை சந்திக்க நாங்கள் தயார் எனக்கூறினார்.

stalin
இதையும் படியுங்கள்
Subscribe