Advertisment

‘எனக்கும், இந்த துண்டுக்கும் சம்பந்தம் இல்ல..’ - நைசாக நழுவிய பாஜக உறுப்பினர் 

 stir in the protest held by the BJP in Vellore

Advertisment

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி காகிதப்பட்டறை பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது வேலூர் டிஎஸ்பிதிருநாவுக்கரசுத் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றும்போது கூட்டத்திலிருந்து கோஷமிட்டவர்கள் நைசாக ஒதுங்கி தனக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் சம்பந்தமில்லாத போல் நடக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாங்க வண்டியில ஏறுங்க என கூறியவுடன் கழுத்தில் துண்டு அணிவித்து கொண்டிருந்த ஒருவர் துண்டை எடுத்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து நான் இல்லை,நான் இல்லை என இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்றார். ஆர்ப்பாட்டக் கூட்டமோ பெரிய அளவில் காட்சியளித்தது என்றும், பிறகு கைது என கூறியவுடன் சிதறடித்து ஓடியதாகவும் அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

police Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe