கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சையான வீடியோ கறுப்பர் யூடியூப் சேனலில் வெளியாகியிருந்த நிலையில்,இதுதொடர்பானகைதுகள், வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவரது வீட்டில் கந்த சஷ்டியை ஒலிக்கவிட்டார். அதேபோல்அவரவர்வீடுகளில் கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்கவிட வேண்டும் என கூறியிருந்தார். இன்று கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியால் கவரப்பட்டு பாஜகவிற்கு மாற்று கட்சியினர் வருகின்றனர். யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.கறுப்பர் கூட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் விசாரிக்கவில்லை.கறுப்பர்கூட்டத்தைதி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்னமும்கண்டிக்கவில்லை,அவர் நிலைப்பாடுதான் என்ன? என கேள்வி எழுப்பினார்.