Advertisment

“ஆசைக்கு இணங்க வேண்டும்...” - இளம்பெண்ணிற்கு இளைஞர் மிரட்டல்

Stick to the desire  young man threatened the young woman

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(26). இவர், 19 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது இளம்பெண்ணிற்கு தெரியாமல் தனிமையில் இருந்ததை பிரவீன்குமார் தனது செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளதாகத்தெரிகிறது.

Advertisment

இந்த நிலையில், காதலியைத்தனது ஆசைக்கு மீண்டும் இணங்குமாறு தனிமையில் அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்புதெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், நாம் இருவரும் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள்என்னிடம் இருக்கிறது. நீ வரவில்லை என்றால் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதோடு கொஞ்சம் பணமும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படத்தை பெண்ணின் வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested police woman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe