/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sterlite plant 600.jpg)
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக அரசு துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால், அந்த மாவட்டத்தின் மண் வளம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கடும் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Struggle against the Sterlite plant 600.jpg)
மேலும் இதன் கழிவுகளால் தாமிர பரணி ஆறும், விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.மண் வளமும், மக்கள் நலமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்றே இப்பிரச்சனைக்கு தீர்வாகும்.எனவே இக் கோரிக்கைக்காக போராடும் பொதுமக்களின் எழுச்சிகரமான போராட்டத்தை மனிதநேயஜனநாயககட்சி ஆதரிக்கிறது.நிரந்தரமாக இந்த ஆலையை மூடுவது குறித்து தமிழக அரசு துரிதமாக முடிவெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.
Follow Us