Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும்...தமிழக அரசு கடிதம்

sterlite

ஸ்டெர்லைட் ஆலையை தருண் அக்ரவால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வேதந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையில் ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதிஎஸ்.ஜே.வசிப்தார்தலைமையில்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சக உறுப்பினர்கள்கொண்ட குழுவை கட்டமைக்க உத்தரவிட்டது.ஆனால்பஞ்சாப் மற்றும்அரியானா உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியானஎஸ்.ஜே.வசிப்தார்அந்த பொறுப்பை ஏற்க மறுத்தார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளில்கேபி. சிவசுப்ரமணியம் அல்லதுஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தீர்ப்பாயம் அறிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்க கூடாது என வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

அதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்பபாயம் பிறப்பித்து வரும் 22-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமை ஆய்வு செய்யும் என தேசிய பசுமை தீர்ப்பாயம்கூறியிருந்த நிலையில் தற்போது ஆலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

case protest Sterlite
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe