sterlite

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐவிசாரிக்க வேண்டும் என ஏற்கனவேஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படிருந்தது.

அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் அமர்வுக்கு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை, சிபிசிஐடி போலீசார் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால் சிபிஐ விசாரணைக்கான உத்தரவில் இடைக்கால தடை வேண்டும் எனதமிழக அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

Advertisment

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என அறிவுறுத்திய நீதிபதி இது தொடர்பாக பதில் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.