style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஸ்டெர்லைட் ஆலை இரு மாதங்களில் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத்பேட்டியளித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிநடைபெற்றமக்கள் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு உயிரிழந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசு.
அதன் பின் ஓய்வு பெற்ற நீதிபதி தருன் அகர்வால் குழுஆய்வின் படி மீண்டும் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் ஆலையின் செயல் அதிகாரி ராம்நாத், இன்னும் இரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். அதற்கான அனுமதியை மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கோரியுள்ளதாககூறியுள்ளார்.