sterlite plant all parties meeting

ஆக்சிஜன் உற்பத்திசெய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக முதல்வர் சுமார் 02.30 மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில், அனைத்து கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.