ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலை கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்! (படங்கள்)

01:23 PM Sep 23, 2018 | paramasivam

ADVERTISEMENT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதையடுத்து அரசின் கொள்கை முடிவின்படி ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. அரசு தரப்பிலும் அதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம் மேகலாயா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான தருண் அகர்வால் மத்திய அரசின் பசுமை விஞ்ஞானி குழுவின் சதீஷ் மற்றும் வரலட்சுமி ஆகிய மூவர் குழுவை அமைத்து ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய பணித்தது.

ADVERTISEMENT

இந்த குழுவினர் நேற்று மாலை தூத்துக்குடி வந்தனர். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் விவரங்களை கேட்டறிந்தது. பின்னர், புதுக்கோட்டை அருகில் உள்ள உப்பாற்று ஓடை பாலத்தின் அருகே குவிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் மற்றும் சாம்பல் கழிவுகளை பார்வையிட்டனர். அது சமயம் வைகோ தனது கருத்தை ஆய்வுக்குழுவிடம் தெரிவிக்க முன்வந்தபோது, போலீசார் அவரை தடுத்தனர்.

பின்னர், இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் ஆலைக்குள் சுமார் 2 மணி நேரம் அங்குள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை ஆய்வு செய்தனர். அதன் பின், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்தனர்.

அந்த ஏரியாவில் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது. இந்த் கூட்டத்திற்கு ஆலையினால் கடும் பாதிப்பு, கேன்சர் மற்றும் தோல் நோய்களும் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளோம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஆண்களும் பெண்களுமாய் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதே சமயம் ஆலையினால் எங்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன. அந்த ஆலையினால் நாங்கள் உபதொழிலை செய்து வந்தது தடை பட்டது. எங்களுக்கு வருமானம் இல்லை. எனவே ஆலையை திறக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு திரண்டு வந்து ஆய்வுக்குழுவிடம் மனு கொடுதனர். இந்த இரண்டு தரப்பினரும் வெளியே வந்தபோது அவர்களுக்குள் வாக்கும் வாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதையடுத்து ஆயுதபடைப்போலிசார் மேலும் மோதலை தவிர்க்க அவர்களை தனித்தனியே விரட்டிஒதுக்கினர். கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்து நடைப்றுகிறது. இதனை மீடித்துக்கொண்டு ஆய்வுக்குழுவினர் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்கின்றனர். நாளை காலை சென்னையில் இது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெறும் என்று அறிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT