Advertisment

ஸ்டெர்லைட் விரிவாக்க விவகாரம்: பந்தாடப்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி! (EXCLUSIVE)

sterlite

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையுலகத்தை சேர்ந்த ரஜினிகாந்த், கமல் உட்பட பலரும் தொடர்ந்து அலையை மூடக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisment

LETTER

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சி.இ.ஓ ராம்நாத் மற்றும் இணை துணை செயலாளர் சுமதி ஆகியோர் பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவித்ததை போல பத்திரிகையாளர் சந்திப்புக்கு பதிலாக அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து அதிகாரியிடம் விசாரித்தோம் "தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிப்கார்ட் இரண்டாவது அலகில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்க பணிக்கு 324 ஏக்கரை சிப்காட் நிர்வாகம் ஒதுக்கி இருக்கிறது. இதில் 654 ஹெக்டர் நில பரப்பில் தொடங்கப்பட்டு இருக்கும் ஸ்டெர்லைட் விரிவாக்க பணிக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்டு இருப்பது தெரிய வரவே தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக சிப்காட் தொழில் பூங்காவின் திட்ட அலுவலருக்கு மீறப்பட்டுள்ள சட்டவிதிகள் குறித்து கடுமையாக கடிதம் எழுதி இருந்தார்.

Advertisment

கண்ணன்

அந்த கடிதத்தில் 1988 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட 1981 ஆண்டு காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தில் 21ஆம் பிரிவின் படி சிப்காட் தொழில் பூங்கா கட்டடம் 2 தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. 21 மற்றும் 37 ஆகிய பிரிவின் படி இது தண்டனை கூடிய குற்றமாகும். மேலும் 31 (அ) பிரிவின் படி தண்டிக்க படத்தக்க குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் ஏன் உங்கள் நிறுவனம் மீது குற்றவியல் வழக்கு தொடரக்கூடாது? மேலும் 33 (அ) பிரிவில் நிறுவனத்தை மூடுவதற்கு, மின்சாரம் மற்றும் நீர் வழங்குதலை நிறுத்த ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் அந்த கடிதத்தில் கேட்டிருந்தார்.

இந்த கடிதம் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதன் பின்னரே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யபட்டு இருக்கிறது. இந்த கடிதத்தை அனுப்பிய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டின் மாவட்ட அதிகாரி கண்ணனை வேறு இடத்திற்கு மாற்ற பல வேலைகள் நடந்து வருகிறது. கண்ணனை பணியிலிருந்து மாற்ற வேலை செய்வது யார் என்று தகவல் அதிர்ச்சியடைய வைத்தது.

murugan

தமிழ்நாடு அரசின் சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பண்ணனின் தனி செயலராக இருந்தவர் முருகன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் முருகன் அமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். முருகன் மூலமாக தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் அமைச்சருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதல்வர் விரிவான அறிக்கை அளிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சில தினங்களுக்கு முன்பு சொல்லியிருந்தார். அந்த அறிக்கையை மாவட்ட அதிகாரியான கண்ணன் தான் தயாரித்து கொடுக்க வேண்டும். சிப்காட்டின் விதிமீறலை கண்டித்து கடிதம் வழங்கியிருக்கும் கண்ணன் அறிக்கை அளித்தால் நிச்சயம் சிக்கலாகிவிடும். தற்போது நேர்மையான அதிகாரி கண்ணனை பணியிடை மாற்றம் செய்ய ஸ்டெர்லைட் தரப்பு முருகன் மூலம் வேலைகள் செய்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் கண்ணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு சட்ட விதிகளை மீறி சிப்காட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

Sterlite plant Sterlite
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe