ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் ஒன்பதாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high court1_0_0.jpg)
தாமிர கழிவுகள் அபாயகரமான கழிவுகள் அல்ல என்ற வேதாந்தா தரப்பு வாதம் தவறு எனவும், சட்டப் பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள அட்டவணையில் சேர்க்கப்படாவிட்டாலும், வேதியியல், உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவும் அபாயகரமான கழிவு பட்டியலில் அடங்கும் என வாதிட்டார். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு எனவும், ஆலையை இயக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தொடர்ந்து மீறியதால், விதிகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாக வாதிட்டார்.
கழிவு மேலாண்மையை மேற்கொள்ள வேண்டிய கடமையை செய்ய ஆலை நிர்வாகம் தவறிவிட்டது எனவும் வைத்தியநாதன் குற்றம்சாட்டினார்.
அரசுத்தரப்பின் வாதம் முடிவடையாத நிலையில், இன்று விசாரணை தொடர்கிறது.
Follow Us