Advertisment

ஸ்டெர்லைட் அனில் அகர்வால் இந்தியாவில் நுழைய தடை விதிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

STERLITE

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு பொதுக்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் (தென்காசி) இன்று (26.06.2018) காலை 11 மணிக்கு நடைப்பெற்றது. நெல்லை மண்டல செயலாளர் எஸ்.செல்லத்துரை தலைமை ஏற்றார்.

Advertisment

கூட்ட முடிவுகள் குறித்து ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது,

Advertisment

20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கெதிரான தாக்குதல்கள், சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் அபரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்தும்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு, காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை குறித்து விவாதித்து முதல் கட்டமாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தமிழகம் முழுவதும் உயர் மின் கோபுரம், சாலை, இயற்க்கை வளங்கள் எடுக்கிறோம் என்கிற பெயரில் நிலம் கையகப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக விவசாயிகளை காவல்துறையை கொண்டு மிரட்டி, பொய் வழக்குப் போட்டு சிறையிலடைத்து சித்திரவதை செய்து அபகறிப்பில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

சாலை போட்டு சுங்க வரி வசூல் செய்வதில் மற்ற தொழில்களை விட பல மடங்கு அதிகம் லாபம் ஈட்டுவதால் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள், மற்றும் அவர்களின் பினாமிகள் சாலை போடும் பணியில் களமிறங்கி வரும் நிலையில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளை அச்சுறுத்தி சுயநலத்திற்க்காக நிலம் கையகப்படுத்தி வருகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை உடன் கை விடுமாறு வலியுறுத்துகிறோம்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் இந்தியாவிற்குள் நுழைய மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திட வேண்டும்.ஆலை மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

காவிரி மேலாண்மை ஆனையம் உடன் கூட்டப்பட்டு கர்நாடக அனைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அச்சன் கோயில், பம்பை ஆறுகளை, வைப்பாறு இணைப்புத் திட்டம் உடன் நிறைவேற்ற வேண்டும். சுமார் 7 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். தாமிரபரணி தண்ணீர் தனியாருக்கு விற்பனை செய்து கொள்ளகொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.முல்லை பெரியாறு அனை 152 அடி கொள்ளவு உயர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Sterlite
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe