Advertisment

“மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை” - அமைச்சர் முத்துசாமி பேட்டி

nn

'மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனமதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''வழக்கம்போல் திறக்கப்படும் நேரத்திலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். டெட்ரோ பேக்கில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. மதுவுக்கு அடிமையான முதியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனித்தனியாக வாகனங்கள் போட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுவால் என்ன பாதிப்பு வருகிறது என்பதை படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை எல்லாம்டாஸ்மாக் கடை முன்பே சென்று போட்டுக் காண்பித்து விழிப்புணர்வு உருவாக்குவதற்கான நடவடிக்கையை தனியாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Advertisment

டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் எனச் சொல்லி நடவடிக்கை எடுத்து அந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எங்கெங்கெல்லாம் கண்காணிப்பு கேமரா இல்லையோ அதை உடனடியாக அமைத்து நேரடியாக சென்னையிலிருந்து அதை கண்காணிக்கலாம். அந்த அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. லோக்கல் காவல்துறைகண்காணிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அதற்கு அடுத்தடுத்த அதிகாரிகள் அங்கங்கே கண்காணிக்கலாம்.

நம்மிடம் இருக்கக்கூடிய கடைகளின் அளவு மிகவும் குறைச்சல். புதிய தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை விட்டுள்ளார். அதில் புதியதாக மாற்றுகின்ற பொழுது500 சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் தான் வேண்டும். அங்கு கழிவறை வசதி இருக்க வேண்டும்.அந்த அடிப்படை வசதி கூட இல்லாமல்தான் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வசதியோடுதான் கடை வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அந்த மாதிரி வருகின்ற பொழுது பில் போடுவதற்கு தனியாக இடம் வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சேல்ஸ்மேன் நின்று கொண்டுதான் வேலை செய்கிறார். அவர் திரும்பக் கூட இடமில்லாமல் இருக்கிறது.

இதெல்லாம் இத்தனை வருஷமாக இருக்கிறது. இந்த நிலைமையில்தான் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் போய் பில் போட வேண்டும் என்றால் அதற்கு தனியாக இடம் வேண்டும். அங்கே ஒரு கியூ நிற்கும். அதன் பிறகு இங்கு வந்து கொடுத்துவிட்டு வாங்க வேண்டும். இதற்கு தகுந்தாற்போல் உள்ள இடத்தில் பில்லிங்சிஸ்டத்தை கொண்டுவரச் சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கேரளாவில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் கேரளாவில் ஒவ்வொரு கடையும் ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் இருக்கும். அதனால் அவர்களுக்கு சுலபமாக இருக்கும்'' என்றார்.

minister muthusamy TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe