steals only half; stir in Panrutti

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆசிரியை ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது வினோத தகவலொன்றுகிடைத்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நடுசாக்குபட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரின் மனைவி ஹெலன் மேரி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பூட்டியிருந்த அவரது வீட்டில் பீரோவிலிருந்த 20 சவரன் நகைகளில் 5 சவரன் மட்டும் காணாமல் போயிருந்தது. அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வந்தனர்.

Advertisment

இந்நிலையில் விலையப்பட்டு பகுதியைச் சேர்ந்த படையப்பா என்ற ராஜகுமாரன் என்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 சவரன் நகையை மீட்டனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருடச் செல்லும் வீட்டில் எத்தனை பவுன் நகைகள் இருந்தாலும் அதில் பாதியை மட்டும் திருடிச் செல்லும் பழக்கம் அவரிடமிருந்து தெரியவந்தது. ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் ராஜகுமாரன் மீது நிலுவையில் இருக்கும் நிலையில் அவரைகைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.