Skip to main content

மனைவியுடன் திட்டமிட்டு திருட்டு; நகைக்கடை கொள்ளை குறித்து காவல் ஆணையர் தகவல்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 Stealing with wife; Police Commissioner informed about jewelery shop robbery

 

கோவை காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் உள்ளே சென்ற மர்ம நபர் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 'இரண்டு கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினம், வைரம் களவு போனதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து புகார்தாரர் தரப்பில் நான்கு கிலோ 600 கிராம் தங்கம், பிளாட்டினம், வைரம் தவிர வெள்ளி சுமார் 700 கிராம் வெள்ளி திருட்டுப் போயுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்கள். இவை எல்லாமே புலன் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மபுரியை சேர்ந்த விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விஜயின் மனைவி நர்மதாவிடம் இருந்து மூன்று கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

விஜய் தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார். புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறும். இந்த வழக்கில் புகார் தார்களிடமிருந்து பெறப்பட்ட புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நகைகளின் விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது. சரியான அளவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்காக முழு விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய நகை இருக்கிறது. விஜய் என்ற அந்த நபரை பிடித்து மீதமுள்ள நகைகள் மீட்கப்படும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்த தாய்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 mother jumped in front of a train with two girls

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அடுத்த வேலம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அறிவழகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு தார்ணிகா(7) ஜெனிஸ்ரீ(5) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலாவுக்கு முன்பே விஜயலட்சுமி என்பவரை அறிவழகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அறிவழகன் – விஜயலட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அறிவழகன். சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கும் முன்பே வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் அறிவழகன்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ விஜயலட்சுமி வேலம் கிராமத்தில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது என் வாழ்க்கை, என் பிள்ளைகள் வாழ்க்கை இப்படியாகிடுச்சே என கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு இன்று காலை கிளம்பினார்.

அவர் கோபத்தில் தனது அம்மா வீட்டுக்குத்தான் செல்வார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். அவர் வாலாஜா ரயில் நிலையத்திற்குச் சென்றவர் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.

Next Story

பிரபல விடுதியின் கணக்காளரிடம் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 gang is threatening to demand money from the accountant of a famous hotel

வேலூரை சேர்ந்தவர் சுதாகர். திமுக பிரமுகரான இவர் மாநகராட்சியின் 24வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.  இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏவிஎம் என்ற பெயரில் தங்கு விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியின் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இரண்டு பேர் இறங்கினர். அதில் ஒருவர்  தங்கும் விடுதியின் உள்ளே வந்து விடுதியின் கேசியரிடம், ஓனர் சுதாகர் எங்கே என கேட்டுள்ளார். நீங்கள் யார் எனக் கேட்டதற்கு, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிவிட்டு, எங்களுக்கு பணம் வேணும் எனக் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. 

அவர் பணம் இல்லை எனச் சொன்னதும் மேலும் தவறான வார்த்தைகளில் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கே பணியாற்றியவர்கள் அங்கே வந்துள்ளனர். அப்படி வந்தவர்களையும் மிரட்டல் விடுத்து அங்கிருந்து வெளியே சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வந்தவர்கள் யார்?, எதற்காக இவரின் விடுதியை குறிவைத்து பணம் கேட்டார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.