Advertisment

“அந்த 12 பேரை அடையாளம் காணும் வரை அங்கேயே இருங்க” - தமிழக முதல்வர் உத்தரவு

'Stay there until 12 more people are identified'- Tamil CM orders

Advertisment

ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரி குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் உதயநிதியும் ஒடிசா சென்றுள்ளார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் விபத்து தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் அதிர்ஷ்டவசமாக காயமோ, உயிரிழப்போ ஏற்படாமல் தப்பித்துள்ள நிலையில் 230க்கும் மேற்பட்ட சென்னை பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவினருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்பொழுது ரயில் விபத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டுமென அறிவுறுத்திய தமிழக முதல்வர், இந்த விபத்தில் இன்னும் 12 பேர் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் அடையாளம் காணப்படாதவர்கள் யார் என அறியும்வரை அங்கே தங்கி இருந்து ரயில் விபத்தில் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

Train TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe