'Stay hopeful...' - Vijay makes a sudden announcement

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதற்காக வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பரந்தூரில் அமைய உள்ள விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்தித்திருந்தார். இந்நிலையில் இன்றுடன் பரந்தூர் போராட்டம் ஆயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் விஜய் 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில், 'மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!' என பதிவு வெளியிட்டுள்ளார்.

Advertisment