ADVERTISEMENT

வீட்டிலிருந்தே குரல் கொடுப்போம்! தொழிலாளர்களின் மே தின கோரிக்கை!

06:10 AM May 03, 2020 | rajavel



கோடை இளவரசியான கொடைக்கானலில் கோடை மலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் உரிமையாளர் சங்கம் கொடைக்கானல் மேல் மலை பகுதியில் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த கரோனா எதிரொலி மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு போக முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறவர்கள்தான் மே தினத்தை முன்னிட்டு வீட்டிலேயே தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து அங்கங்கே போராட்டத்தில் குதித்தனர். இதில் மங்கலம்கொம்பு, எம்ஜிஆர்நகர், பழம்புத்தூர் மற்றும் புதுப்புத்தூர் பகுதிகளில் உள்ள தொழிலாள மக்கள் வீட்டிலேயே தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதற்காக ஒயிட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர்களில்... போர்க்கால அடிப்படையில் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் 9000 என மூன்று மாதத்திற்கு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அதுபோல் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கரோனா காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை கூடுதலாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் போர்க்கால அடிப்படையில் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இப்படி சில கோரிக்கைகளை முன்வைத்து எழுதி அதை வீட்டிலிருந்தவாரே தங்கள் எதிர்ப்பு குரலை அரசுக்கு கோரிக்கைகளாக வெளி படுத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக கோடைமலை அம்பேத்கார் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் உரிமையாளர் சங்க தலைவர் ஜெயசுதா, செயலாளர் திருமுருகன், பொருளாளர் கருப்புசாமி மற்றும் கோடை கிளை செயலாளர் அழகு சிவகாமி ஆகியோரிடம் கேட்டபோது, கரோனா மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை வெட்டிக்கு போக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி யாரும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் ரேஷன் பொருட்களும் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள எங்கள் சங்கத்தில் இருக்கும் ஆயிரத்து 300 தொழிலாளர்களில் ஒருவருக்கு கூட அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வரவில்லை. வெறும் 25 பேருக்கு தான் ரேஷன் பொருட்களை கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனே அதிகாரிகள் வழங்க வேண்டும். தவறினால் போராட்டத்தில் குதிக்க கூட தயங்க மாட்டோம் என்று கூறினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT