Skip to main content

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதா வாலாஜா சிலைகள்? ஐ.ஜி. உத்தரவுக்கு பின் விசாரிக்கும் போலிஸ்

Published on 22/10/2018 | Edited on 22/10/2018

 

Statues



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  திருமலைச்சேரி கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டில்  முதலாம் பரந்தாமன் சோழன் மகன் கிருஷ்ணன் சோமநாதர் திருக்கோயிலை கட்டியுள்ளார். பழமைவாய்ந்த இந்த கோயிலில் இருந்து 12 யோகி சிலைகளை காணவில்லை என காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். 
 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  திருமலைச்சேரி கிராமத்தில் 8ஆம் நூற்றாண்டில் பிற்கால சோழரான முதலாம் பரந்தாமன் சோழன் மகன் கிருஷ்ணன் என்பவர் சோமநாதர் என்கிற சிவன் கோயிலை கட்டினார். இந்த கோயிலில் இருந்து 12 யோகிகள் சிலைகள், தேவி சிலை, தூரபாலகன் கற்சிலைகள் திருடி செல்லப்பட்டுள்ளது.
 

திருடி செல்லப்பட்ட அந்த சிலைகள் அமெரிக்க இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கோயிலில் இருந்த நந்தி சிலையை போலவே சமீபத்தில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் மன்னன் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட நந்தி சிலைகளில் ஒத்துள்ளது. மேலும் அந்த கோயிலில் புதிதாக சுமார் 30 தூண்கள் உள்ளது. இது எப்படி இங்கு வந்தது, பழைய தூண்கள் என்னவானது என தெரியவில்லை என காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் மனு தந்தார். மனு அளித்து ஒரு மாதமாகியும் புகாரின் மீது வழக்கு பதியபடவில்லை. 
 

இதனை தொடர்ந்து இந்த சிலைகடத்தல் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மணிக்கவேலை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் டெல்லிபாபு. புகாரின் தன்மையை அறிந்த அவர் புகாரின் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என வேலூ‌ர் மாவ‌ட்ட‌ எஸ்.பிக்கு உத்தரவிட்டார். அதன்பின் வேலூர் மாவட்ட எஸ்.பி அந்த கோயில் அமைந்துள்ள வாலாஜா காவல்நிலைய ஆய்வாளரிடம் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து வாலாஜா காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டுள்ளது. 
 

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தால் இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பாகவும், கடத்தியவர்கள் தொடர்பாகவும் பல முக்கிய தகவல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், உள்ளுர் போலிஸார் சரியாக விசாரிக்கமாட்டார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடற்கரையில் கிடந்த இரண்டு சாமி சிலைகளை மீட்ட காவல்துறை! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Police recover two Sami idols lying on the beach!

 

கடற்கரையில் கிடந்த இரண்டு சாமி சிலைகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சென்னை பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரையில் இரண்டு சாமி சிலைகள் கிடந்ததைக் கண்ட, அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சிலைகளை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்ற காவல்துறையினர். அவை கடத்தப்பட்ட சிலைகளா? சிக்கிவிடுவோம் என அஞ்சி யாராவது வீசி சென்றார்களா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கடற்கரையில் கிடந்த இரண்டு சிலைகளில் ஒன்று அனுமன் சிலை ஆகும். மற்றொரு சிலை முருகன் சிலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

 

இதற்கிடையில், சிலைகளுக்கு காவல் நிலையத்தில் பூஜை செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

Next Story

வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம்; நீர்நிலைகளில் கரைக்கலாம்!- உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

vinayagar chaturthi festival statues chennai high court order

 

மக்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்குமாறு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (20/08/2020) அறிவுறுத்தியது.

 

கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளைக் கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்த நிலையில், தடை செய்த உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

vinayagar chaturthi festival statues chennai high court order

 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (20/08/2020) விசாரணைக்கு வந்தபோது, விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும், அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா என, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் அவர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

கரோனா தொற்றுச் சூழல் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், சிலையை வைத்து வழிபட்ட பின், 5 அலலது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளைப் பின்பற்றி, பொதுமக்கள் அதனைப் பெரிய கோவில்கள் அருகில் கொண்டு வந்து வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா எனக் கேள்வி எழுப்பினர்.

 

அரசின் விளக்கத்தைப் பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், இந்த வழக்கு இன்று (21/08/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மதுரைக் கிளை நீதிமன்றம் இதுபோன்ற வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. மக்களின் தனிநபர் வழிபாட்டிற்கு அரசு தடையோ கட்டுப்பாடோ விதிக்கவில்லை. மேலும், மெரினா கடற்கரை தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. மெரினாவில் சிலைகளைக் கரைத்துவிட்டுச் செல்வதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது? மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே? கூவம் ஆற்றில்கூட விநாயகர் சிலைகளைக் கரைக்கலாமே? சிலைகளைக் கரைக்க வரும் மக்கள் அங்கேயே தங்கிவிடுவதில்லையே? எனத் தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பினர்.

 

அதற்கு, பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் அரசு என்ன செய்வது?  என்று வாதிட்டார். 

 

இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், கடந்த 22-ஆம் தேதியே தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. காலம் காலமாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. சிலைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது என மனுதாரர் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள், விநாயகர் சிலைகளைக் கடலில் கரைப்பதால் எந்த ஒரு தொற்றுப்பரவலும் ஏற்பட வாய்ப்பில்லை. ஊர்வலமாக சிலைகளைக் கொண்டுசெல்ல, சிவசேனாவும் இந்து முன்னணியும் மறுத்துவிட்டன. சாந்தோம் கடற்கரை பகுதியில் சிலைகளைக் கரைக்க தனிநபருக்கு தடையில்லை. கடற்கரையைப் பயன்படுத்துவது, தனிநபர்கள் விநாயகர் சிலையை பூஜை செய்த பிறகு, அருகில் உள்ள கோயில்களுக்கு வெளியேவோ, அல்லது தனிநபராகவோ, சிலைகளை எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கலாம். இவை அனைத்தும் கரோனா விதிமுறைகளுக்குள் அடங்கும். மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உத்தரவிட்டுள்ளனர்.