சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜியாக டி.எஸ். அன்பு நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் நிர்வாக ஐ.ஜியாக இருந்த அன்பு, சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த பொன். மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில், வழக்கு ஆவணங்களை உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து புதிய ஐ.ஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.