Statue of 'Brother Horse' awaiting unveiling

தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை ) முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நாளை மறுதினம் மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் நாளை சென்னை வருகிறார். பின்னர் மாலை 5:45 மணி அளவில் கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த தம்பி குதிரையினுடைய சின்னம் சிலையாக அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நாளை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலை சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதற்கான சிலை என கீழே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. நாளை நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.