Skip to main content

அம்பேத்கர் சிலை உடைப்பு; பதற்றத்தில் வேதாரண்யம்!

Published on 25/08/2019 | Edited on 26/08/2019

 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்கிற பாண்டியன், இவர் முக்குலத்து புலிகள் அமைப்பில் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கும் வேதாரண்யம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களுக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினையாகியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேரந்த ராமகிருஷ்ணன் என்பவரின் காலை பாண்டியனின் தரப்பு வெட்டி வன்மத்தை மூட்டியிருக்கிறது.

இந்தநிலையில் பிரச்சனை அமைதியாகியிருந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பாண்டியன் தனது பொலிரோ காரில் வந்து வேதாரண்யம் காவல்நிலையத்தின் வாசலில் நிறுத்திவிட்டு காவல்நிலையத்திற்குள் சென்றிருக்கிறார். ஏற்கனவே வெட்டுபட்ட கோபத்தில் இருந்த ராமச்சத்திரன் தரப்பினர் பாண்டியனின் காரை காவல்நிலையத்திற்கு முன்பே தீவைத்து கொலுத்தினர். அதனை கண்டு ஆத்திரம் அடைந்த பாண்டியனின் சமூகத்தினரும், அவரது ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு வேதாரண்யம் பேருந்து நிலையத்தின் வாயிலில் இருந்த டாக்டர் அம்பேத்கரின் சிலையை உடைத்து தலையை துண்டாக்கியதோடு, தலையை கீழே உருட்டினர். அதோடு ஆத்திரம் குறையாத பாண்டியன் தரப்பு வேதாரண்யத்தில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களின் கடைகளை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கினர். இவ்வளவும் காவலர்களின் கண் பார்வையிலேயே அறங்கேறியதாக கூறி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், ஒன்றுகூடி சிலை உடைப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான போலிஸார் குவிக்கப்பட்டு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது, அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.