Advertisment

நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரை மது பாட்டிலால் தாக்கிய மர்ம நபர்கள்

State President of Fair Price Shop Workers Union attacked with liquor bottle

Advertisment

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை இரவு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜெயச்சந்திரன் ராஜா இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்குப் பின்னால் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து இவரிடம் உங்கள் வண்டியிலிருந்து பேப்பர் விழுந்துள்ளது எனக் கூறியுள்ளனர்.

உடனடியாக இவர் வண்டியை நிறுத்திவிட்டுப் பார்த்தபோது ஜெயச்சந்திரன் ராஜாவை, மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதனால் காயமடைந்த அவர் ரத்தக் காயத்துடன் நின்றுள்ளார்.அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதித்தனர். இதனையறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவரை மது பாட்டிலால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident attack
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe