Advertisment

அரசுடைமையான இளவரசி, சுதாகரன் சொத்துக்கள்... கலெக்டர் நேரில் ஆய்வு (படங்கள்)

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றஇளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில்தற்பொழுது அவை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

Advertisment

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று (08/02/2021) சசிகலா தமிழகம் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வேலஸ் தோட்டம் 1 வது தெருவில் கிருஷ்ணா சேம்பர்ஸ் என்ற நான்கு மாடி கட்டிடத்தில் இளவரசிக்கு சொந்தமான இடங்களை அரசு கையகப்படுத்தியதால் இன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அதனை நேரில் ஆய்வு செய்தார்.

assets Ilavarasi suthakaran TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe